John

ஜான் சுந்தர் கவிதைகள்

ஓவியம்: அகன் குழந்தையப்பன்

இசைஞனின் கவி அல்லது கவிஞனின் இசை

இதுகாறும் மதுப்புட்டியை ஸோகரஸந்ததும்பும் வயலினென்றே நினைத்திருக்க
வாய் பொருத்தி
நீ சரித்த க்ஷணத்திலந்த
பியர் போத்தல்
எக்காளத்தையூதுங்
கொம்பானதைப் பார்த்தேன்.

அடியில் கால் நுழைத்து
பாதமழுத்தும்
மோகத்திற்கெதிராய்
ரகசியங்களை
திறந்து காட்டிJohn Kavithaigal-1
அத்தனைப் பற்களிலும்
சிரிக்கும் அவளொரு
வெட்கமில்லாப்  பியானோதான்.

தம்புராவின் உறுமலுக்கு
வாலைச்சுருட்டிக் கொள்கிறது
ஆன்மா.

கிதாரென்று நீ
நம்பிக்கொண்டிருப்பது
ஓர் அம்மணத்தை

உன் கையிலிருக்கும்
இந்த ஒலிவாங்கி
அரங்கம் ருசிக்கும்
ஐஸ்க்ரீமாகிவிட்டது பார்.


திறந்தே கிடக்கிற வீடு

அந்தக்கா அந்தர்தத்துல செய்லீங்..
அழுகைக்கும் விம்மலுக்கு இடையிலிருந்து
அவள் மேலும் சொன்னதாவது
கொத்சாவி அலெக்சண்ண
வேக்யானமானவருங்..
டேப்ரிக்காட வெளியவு
கேசட்ட பீர்வாக்குள்றயு வெச்ருப்பாருங்..
டீவி வெளிய
ரிமோட்டு உள்ற
பி ரி ஜ்ஜு பூட்டிதா இருக்ங்..
வாசக்கதவுக்கு ஜங்கிலியோட ஒரு பூட்டுங்..
நெலவாசப்படிக்கி இரும் பட்டா போட்ட பூட்டுங்..
தெனத்தந்தி வந்தாலுமு தந்தியே வந்தாலுமு
உள் வாசல பூட்னப்பறந்தா வெளிய வருவாருங்..
பூட்ட இளுத்திளுத்து பாப்பாருங்..
பூட்ன வூட்டுள்றதான் பிலிமிக்கா இருக்ங்..
பக்கத்தாடி பில்டிங் வேல நடக்குதுங்..
ஆளுக அதையு இதையு பேசற சத்தமு
மேஸ்திரி சத்தம் போட்ரதுமு  நல்லா கேக்குங்..
ஒருநா ரெண்டு பேரூ வெளிய போறப்பJohn Kavithaigal-2
பூட்ன கையோட சாவிய அந்தக்காகட்ட குடுத்ட்டு
பொடக்காலிலிக்குற சந்துகுள்ற
செருப்பத் தொட்ட்டு வரப்போகைல
அந்தண்ணனோட புடுபைக்கு வண்டிக்கட்ட
நின்ட்டுருஞ்சுங் அந்தக்கா
அவுரு திரும்பவன்ட்டு..

பூட்ட இளுத்துப் பாக்கைல
சாவியத்தா தேட்ராராக்குன்ட்டு
இங்கதா இருக்குன்சொல்றக்கோசரம்
இடுப்பத் தட்டிக் காட்டுச்சுங்..
அதப்டி காட்டவு
அட இங்கியு ஒன்ன மாட்ரா திருவாத்தானு
பக்கத்தூட்டு மேஸ்திரி கத்தவுஞ்செரியா இருந்துச்சுங்..
அலெக்சண்ண ஆளு அப்டியே
ப்ரம்மை புடிச்சாப்ல ஒக்காந்தவருதா
அன்னைலந்து ஆருட்டவும் பேசறதில்லீங்..
எதையிம் பூட்ரதில்லீங்..